தூத்துக்குடியில் காணும் பொங்கல் விழாவை முன்னிட்டு மாநகராட்சியில் உள்ள பூங்காக்களை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியிலுள்ள ராஜாஜி பூங்கா, டூவிபுரம் பூங்கா, எம்ஜிஆர் பூங்கா, முத்து நகர் கடற்கரை, ரோச் பூங்கா, தனசேகரன் நகர் பூங்கா என மாநகரில் உள்ள அனைத்து பூங்காக்களையும் மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் கூறும்போது, காணும் பொங்கல் என்பது நம்முடைய வாழ்க்கையில் உறவுகளை வலுப்படுத்துவதற்கான ஓரு திருநாளாக கொண்டப்படுகிறது. அதனை கருத்தில் கொண்டு அன்றைய தினம் மாநகர மக்கள் ஒன்றாக கூடி கொண்டுவதற்காக மாநகரில் உள்ள அனைத்து பூங்காக்களையும் மக்கள் பயன்படுத்தும் விதமாக பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது என்றார்.
ஆய்வின் போது, திமுக வட்ட செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், மாநகர மீனவரணி அமைப்பாளர் டேனி, மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் சென்றனர்.


