தூத்துக்குடியில் குடும்ப அட்டை தாரர்களுக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.
தமிழக முதலமைச்சர் 2024ம் ஆண்டு பொங்கல் திருநாளை தமிழ்நாடு மக்கள் சிறப்பாக கொண்டாட அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை இன்று சென்னையில் தொடங்கி வைத்தார்கள்.
அதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் நியாய விலைக் கடைகளில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பாக 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் முழுக்கரும்பு ஆகியவற்றுடன் ரொக்கத்தொகை ரூ.1000 சேர்த்து பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி ஸ்டேட் பேங்க் காலனி பகுதியில் உள்ள நியாய விலை கடையில் இன்று குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார். நிகழ்ச்சியில் வட்டார வழங்கல் அலுவலர் அபுல் காசிம், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் முரளி கண்ணன், வட்டாட்சியர் செல்வகுமார், மாநகர திமுக செயலாளர் ஆனந்த்சேகரன், மாவட்ட பிரதிநிதி செல்வகுமார், மாமன்ற உறுப்பினர் ஜாக்குலின் ஜெயா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


