நமது வெப்சைடில் தற்போது 117 வது நாடு இணைந்துள்ளது. இணைந்துள்ள தூனிசியா நாட்டை சேர்ந்தவரை அன்போடு வரவேற்கிறேன். துனீசியா ( தூனிசியா), என்றழைக்கப்படும் துனீசியக் குடியரசு , வட ஆப்பிரிக்கக் கண்டத்தில் மத்திய தரைக் கடலை ஒட்டி அமைந்துள்ள ஒரு நாடு ஆகும். இதுவே ஆப்பிரிக்கக் கண்டத்தின் வடகோடியில் அமைந்துள்ள நாடு. மேலும் அட்லஸ் மலைத்தொடரை ஒட்டியுள்ள நாடுகளில் சிறியதும் இதுவே ஆகும். நாட்டின் 40 சதப்பரப்பு சகாராப் பாலைவனம் ஆகும். எஞ்சியுள்ள பகுதிகள் வளம் நிறைந்தவை ஆகும். இதன் கடற்கரையின் நீளம் 1300 கிலோமீட்டர்கள் ஆகும். இந்த நாட்டின் தலைநகரம் தூனிஸ் என்பதாகும். ஆட்சி மொழி அரபு. மக்கள் தூனிசியர். குடியரசுத் தலைவர்& ஃபுவாத் முபாதா.
பிரதமர்& முகமது கனூச்சி. மார்ச்சு மாதம் 20 தேதி 1956 பிரான்ஸ் இடமிருந்து விடுதலை பெற்றது. மொத்த பரப்பு 163,610 கிலோ மீட்டராகும்.
மக்கள் தொகை( ஜூலை 2005 மதிப்பிடு)
10,102,000 ஆகும்.


