தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய 5 காவல் ஆய்வாளர் உட்பட 23 காவல்துறையினருக்கு, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் வெகுமதி மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் எதிரி யாரென்று தெரியாமல் நீண்டநாட்களாக புலன் விசாரணையில் இருந்து வந்த நிலையில் கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட எதிரி கலியாவூரைச் சேர்ந்த பெருமாள் (60) என்பவரை கைது செய்த முறப்பநாடு காவல் நிலைய ஆய்வாளர் திரு. பாஸ்கரன், தலைமை காவலர் திரு. சுந்தர்ராஜ், முதல் நிலை காவலர்கள் திரு. சதீஷ் தணிகைராஜா, திரு. சுரேஷ்குமார் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
கடந்த 03.08.2021 அன்று ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தங்க நகைக்காக மூதாட்டியை கொலை செய்த வழக்கில் சம்பவம் நடைபெற்ற 24 மணி நேரத்திற்குள் தனிப்படை அமைத்து எதிரியை கண்டறிந்து கைது செய்த ஏரல் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. மேரி ஜெமிதா, உதவி ஆய்வாளர் திரு. சண்முகசுந்தரம், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் திரு. ஜேம்ஸ், திரு. மணி, முதல் நிலை காவலர் திருமதி. சந்தனமாரி, காவலர்கள் திரு. மாரியப்பன், திரு. பலவேசபார்த்திபன் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
5 காவல் ஆய்வாளர் உட்பட 23 காவல்துறையினரின் சிறந்த சேவையை பாராட்டி தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வெகுமதி மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
இந்நிகழ்வின் போது குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்ற தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. கோபி, தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. கார்த்திகேயன், பயிற்சி காவல் துணை கண்காணிப்பாளர்கள் திரு. கணேஷ்குமார், செல்வி. பவித்ரா, செல்வி. ஷாமளாதேவி மற்றும் மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு. பேச்சிமுத்து ஆகியோர் உடனிருந்தனர்.


