அருட்தந்தை லூர்து ராஜா அடிகளார்.
இந்த பெயரை சொன்னாலே… தென்பாண்டிச்சீமையில் தெரியாதவர்கள் இருக்கமுடியாது.
அது எப்படி? ஒரு கிறிஸ்தவ பாதிரியார். அவரை அவர் பணியாற்றிய பங்கில் மட்டுமே தெரிந்திருக்க வேண்டும். ஆனால்.. நீங்கள் சொல்லுவதை பார்க்கும் போது அனைத்து மக்களுக்கும் எப்படி தெரியும். இது ஒரு ஆச்சரியமான விசயம் தான். அதுவும் ஒரு சிவகங்கை சீமைக்காரர், தென்பாண்டிச்சீமையில் வந்து மக்களோடு மக்களாக இணைந்து பணியாற்றியிருக்கிறார். தென்பாண்டிச் சீமைக்காராகவே முத்திரை பதித்து இருக்கிறார். இதுதான் நாம் கூறப்போகிற ஆச்சரியம்.


