ஆர்யா (பிறப்பு: டிசம்பர் 11, 1980) ஒரு தமிழ்த் திரைப்பட நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் 2005ஆம் ஆண்டு விஷ்ணுவர்த்தன் இயக்கிய அறிந்தும் அறியாமலும் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து ஓரம் போ, நான் கடவுள், மதராசபட்டினம், பாஸ் என்கிற பாஸ்கரன், சிக்கு புக்கு, வேட்டை, சேட்டை, ராஜா ராணி, இரண்டாம் உலகம், ஆரம்பம் உள்ளிட்ட 25க்கும் மேல்பட்ட திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பரிசியமான நடிகர் ஆனார். ஆர்யாவிற்கும் சாயிஷாவிற்கும் மார்ச் 10, 2019 அன்று திருமணம் நடந்தது. இவர் டிசம்பர் 11, 1980ஆம் ஆண்டு காசர்கோடு , கேரளாவில் பிறந்தார். இவருக்கு சத்யா, என்ற ஒரு இளைய சகோதரன் உள்ளார். அவரும் ஒரு தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார்.நடிகை சாயிசா என்பவர் திருமணம் செய்து கொண்டார்.ஆர்யாவின் இயற்பெயர் ஜம்ஷத் சேதிராகத் என்பதாகும். பிறந்த ஊர் திரிகரிபுர், காரசகோடு. கேரளா. பெற்றோர் பெயர் உமர் செதிராகாந்த்-ஜாமிலா செதிரா காந்த். இவர் 2003ஆம் ஆண்டு இயக்குனர் ஜீவா இயக்கிய உள்ளம் கேட்குமே என்ற திரைப்படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்த திரைப்படத்தில் சாம், அசின், பூஜா, லைலா நடித்துள்ளனர். இந்த திரைப்படம் சிறு பிரச்சனை காரணமாக 2005ஆம் ஆண்டு வெளியானது. இந்த திரைப்படம் வருவதற்கு முன்பு விஷ்ணுவர்த்தன் இயக்கிய அறிந்தும் அறியாமலும் என்ற திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தில் பிரகாஷ் ராஜ், நவ்தீப் மற்றும் சமிக்சா நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்தில் குட்டி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த திரைப்படம் வணிகரீதியாக வெற்றி அடைந்தது. இந்த திரைபப்டத்தில் நடித்ததற்க பிலிம்பேர் விருது புதுமுக நடிகருக்கான விருதை வென்றார். அதை தொடர்ந்து அதே ஆண்டில் ஒரு கல்லூரியின் கதை என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை சோனியா அகர்வால் நடித்துள்ளார்.
2006ஆம் ஆண்டு கலாபக் காதலன், பட்டியல், வட்டாரம் போன்ற திரைப்படங்களில் நடித்தார். பட்டியல் என்ற திரைப்படத்தில் இவருடன் நடிகர் பரத் நடித்துள்ளார். இவர்களுக்கு ஜோடியாக பூஜா மற்றும் பத்மப்பிரியா நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்தை விஷ்ணுவர்த்தன் இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் வணிகரீதியாக வெற்றி அடைந்தது. நல்ல வசூலும் செய்தது.
2007ஆம் ஆண்டு ஓரம் போ என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைபடத்தில் இவருக்கு ஜோடியாக பூஜா நடித்துள்ளார். சேரன் இயக்கி நடித்த மாயக் கண்ணாடி என்ற திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
2009ஆம் ஆண்டு சர்வம் மற்றும் பாலா இயக்கிய நான் கடவுள் என்ற திரைப்படத்தில் ருத்திரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த திரைபப்டத்தில் முதலில் நடிப்பதற்காக அஜித் குமார் ஒப்பந்தம் செய்யப்பட்டார். அதன் பிறகு ஆர்யா ஒப்பந்தம் செய்யப்பட்டு நடித்தார். இந்த திரைப்படம் காசி மற்றும் தமிழ்நாட்டில் படபிடிப்பு எடுக்கப்பட்டது. இந்த திரைப்படத்தில் ஆர்யா ஒரு அகோரியாக நடித்துள்ளார். இவரது நடிப்பு பலரால் பாராட்டப்பட்டது. இந்த திரைபப்டத்தில் இவருடன் சேர்ந்து பூஜாவும் நடித்துள்ளார். இந்த திரைப்படம் பல பிரிவுகளின் கில் தமிழக அரசு திரைப்பட விருதுகள், விஜய் விருதுகள், போன்ற பல விருதுகளை வென்றுள்ளது. சர்வம் திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக திரிசா நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை விஷ்ணுவர்த்தன் இயக்கியுள்ளார். சிவா மனசுல சக்தி என்ற திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.


