தூத்துக்குடி தங்கம்மாள் நினைவு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிளை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.
தூத்துக்குடி தங்கம்மாள் நினைவு மேல்நிலைப் பள்ளி மாணவா்- மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு, மாணவ மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.
இந்நிகழ்வில், பள்ளித் தாளாளா் ஜீவன் ஜேக்கப், பெரியசாமி அறக்கட்டளை நிா்வாகிகள் சுதாசுதன், மருத்துவா் மகிழ்ஜான் சந்தோஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


