ஆழ்வார்திருநகரி புனித அன்னமாள் ஆலய திருவிழா சப்பர பவனி நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆழ்வார்திருநகரி புனித அன்னமாள் ஆலய திருவிழா கடந்த ஜூன் 30-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவிழா நாட்களில் தினமும் சிறப்பு திருப்பலி, மறையுரை நற்கருணை ஆசீர் நடந்தது. பத்தாம் திருவிழா தெற்கு சப்பர பவனி நடந்தது. ஆழ்வார்திருநகரி கடைவீதிகள் மற்றும் முக்கிய தெருக்கள் வழியாக சப்பரம் வலம் வந்து மீண்டும் ஆலய வளாகத்திற்கு வந்தடைந்தது.
இதில் தெற்கு மாவட்ட பாஜக தலைவர் சித்ராங்கதன், மாவட்ட பொது செயலாளர் ராஜா, சிறுபான்மை அணி மாவட்ட தலைவர் ஸ்டீபன் லோபோ, மாவட்ட செயலாளர் கனல் ஆறுமுகம், பிரச்சார பிரிவு மாவட்ட தலைவர் மகேஷ்வரன், நகர தலைவர் பட்டாபிராமன், ஒன்றிய தலைவர் முத்துகுட்டி, தென்கரை விவசாய சங்க தலைவர் ரஜினி ஒன்றிய துணை தலைவர் பானுமதி மோகன், உள்ளாட்சி பிரிவு மாவட்ட செயலாளர் வேல்குமார், விவசாய அணி மாவட்ட துணை தலைவர் முருகன், கிளை தலைவர் அருண் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கரும்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


