தூத்துக்குடியில் நண்பர்களுடன் ஏற்பட்ட தகராறில் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி லயன்ஸ் டவுன் 8வது தெருவைச் சேர்ந்தவர் ஆல்பர்ட் மகன் காட்சன் (18). மீனவர். இவர் நேற்று இரவு நண்பருடன் சேர்ந்து மது குடித்தபோது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மணமுடைந்த காட்சன் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டாராம்..
இதுகுறித்து தகவல் அறிந்த தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் திருமுருகன் சம்பவ இடத்திற்கு சென்று இவரது உடலை மீட்டு பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


