நமிதா (மே 10, 1981), தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். தமிழ் மொழியில் மட்டுமன்றி கன்னடா, தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளிலும் இவர் நடித்திருக்கிறார். பெரிதும் கவர்ச்சியாக நடித்துப் புகழ்பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழ் தொலைக்காட்சி நிகழ்நிலை நடனப்போட்டி மானாட மயிலாட நிகழ்ச்சியில் நடுவராகப் பங்கு பெற்றுள்ளார். இவர் தென்னிந்திய திரையுலகில் முக்கியமாக செயல்பட்டு வரும் ஓர் இந்திய திரைப்பட நடிகை ஆவார். தெலுங்கு காதல் திரைப்படமான “சொந்தம்” (2002) மூலம் அறிமுகமானதற்கு முன்பு, மிஸ் இந்தியா 2001 போட்டியில் பங்கேற்றார்
நமிதா குஜராத் மாநிலம், சூரத்தில் பிறந்தார். அவரின் வீட்டில் நமிதா கபூர் என்ற பெயரிலே அழைக்கப்படுகிறார். நமிதா 2001 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா போட்டியில் கலந்து கொண்டு இரண்டாம் இடம் பெற்றார். அந்த போட்டியில் முதல் இடம் பெற்றவர் செலினா ஜெயிட்லி , மூன்றாம் இடம் பெற்றவர் திரிஷா. ‘சொந்தம்’ என்ற தெலுங்கு படத்தில் அவர் முதன்முதலாக நடித்தார். தமிழில் முதல் படம் ‘எங்கள் அண்ணா‘. எரிக் மேனிங் இயக்கிய ‘மாயா’ என்ற ஆங்கிலப் படத்திலும் நமிதா நடித்துள்ளார்.
2000 களின் நடுப்பகுதியில், அவர் தமிழ் படங்களில் கவர்ச்சியான பாத்திரங்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்றார். மேலும் பெரும்பாலும் பழைய நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். தசாப்தத்தின் முடிவில், தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் நமீதாவும் இருந்தார். மேலும் தமிழகம் முழுவதும் பார்வையாளர்களிடமிருந்து வழிபாட்டு முறை போன்ற ரசிகர்களைப் பெற்றார். 2010 ஆம் ஆண்டு முதல், இவர் நடித்தத் திரைப்படங்கள் தோல்வியிலேயே முடிந்தது. திரையுலகு நமீதாவைத் தவிர்த்தது. பின்னர், திரல்ப்படங்களில் சிறு சிறு வேடங்களில் தோன்றவும், அவரது ரசிகர்கள் அவரைத் தவிர்க்கவும் தூண்டியது.


