அகத்தியன் கமண்டலம் தானுருண்டு
மலைதனில் நீர் சொறிந்து
இருமலைக்கிடையில் தடம் புரண்டு
தாமிரத்தை தனக்குள் கொண்டு
தான் தங்கி சென்ற இடமெல்லாம் புனிதமாகி
நெல்லையிலே பெரு நீராகி
பொருமை நெல்லுதனை தான் விளைத்து பொருநை புனை பெற்று
நஞ்சை
நெல்லையே வேலியாக்கி
நல்தடத்தில் தானோடி
கரையோரம் தோன்றியதோர் உலக மரபு
ஆதித்த நெல்லூர் தோன்றி
உலகிற்கே தந்நாகரிகமே தலைமை தந்து
தம் நீர் அருந்தும் உயிர் யாவைக்கும் வீரத்தை தந்தருளி
தமிழிலே தொல்காப்பியம் பெற்ற எம் பெருநதி தாமிரபரணி என்னும் பொருநை நதியே
உலகிற்கு தமிழ்தாயாகிய பெருநதி பெருந்தமிழரின் வாழ்வியல் நதி
தாகமில்லா தாமிர சொந்தன்
நெல்லை ச.முருகேசன் D.EEE.,
தெய்வை சிவந்திபட்டி


