வல்லநாடு அரசு மேல்நிலைப்பள்ளியில் சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ஜெயராமன் ( 48). இவர் தனக்கு சொந்தமாக பாளையங்கோட்டை வி.எம்.சத்திரம் முதலாளி நகரில் சொந்தமாக வீடு ஒன்றை கட்டியுள்ளார். அந்த வீட்டை தனது பள்ளியில் கல்வி பயிலும் 10 வது வகுப்பு மாணவிகள் ஜெபா, பாலபேச்சியம்மாள் ஆகியோர்களை ரிப்பனை வெட்டி வீட்டை வைத்து திறந்தனர். அதன் பின் செய்துங்கநல்லூர் ஆர்.சி. பங்கு தந்தை ஜாக்சன் மந்திரித்து ஜெபம் செய்தார்.
இது குறித்து ஆசிரியர் ஜெயராமன் கூறும் போது, பெரும் பாலுமே பள்ளி மாணவ மாணவிகளுக்கும் ஆசிரியர்களுக்கு பெரிய அளவில் புரிந்துணர்வு இருப்பதில்லை என்ற கருத்து சமூகத்தில் உள்ளது. மேலும் அரசு பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளை பெரிய அங்கீகாரம் கொடுப்பதில்லை என்ற கருத்தும் மக்களிடையே உள்ளது. என்னுடைய வீட்டை திறக்க என்னிடம் படிக்கும் மாணவிகள் வரும் போது, அவர்கள் இப்போதே மிகப்பெரிய வி.ஐ.பியாக உணருவார்கள். வருங்காலத்தில் மிகப்பெரிய வி.ஐ.பியாக உயர முயற்சி செய்வார்கள். எனவே அவர்களுக்கு அந்த வாய்ப்பை தந்தேன். என்று கூறினார்.
ஆசிரியர் ஜெயராமனின் இந்த செயல் அனைவராலும் பாராட்டு பெற்றது.


