ஆத்தூர் அருகே மனைவியை பிரிந்த விரக்தியில் இருந்த சமையல் மாஸ்டர் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்..
தூத்துக்குடி மாவட்டம், தெற்கு ஆத்தூர் முஸ்லீம் நடுத்தெருவை சேர்ந்தவர் கிதிர்முகமது மகன் காஜா நஜிமுதீன் (44). சமையல் மாஸ்டர். இவருக்கு திருமணமாகி விட்டது. கடந்த 5 ஆண்டுகளாக கணவன், மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். தற்போது வேலையில்லாமல் மிகவும் மன உளைச்சலில் வீட்டில் இருந்துள்ளார். நேற்று காலையில் காஜா நஜிமுதீன் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். சிறிது நேரத்திற்கு பின்னர் அவர் வடக்கு ஆத்தூர் தாமிரபரணி ஆற்றுப்படித்துறையில் தண்ணீருக்குள் பிணமாக கிடப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து அவரது அண்ணன் மகன் முகமது அப்துல் காதர் அங்கு சென்று பார்த்துள்ளார். காஜா நஜிமுதீன் குளிக்கச் சென்றபோது நீச்சல் தெரியாமல் தண்ணீரில் மூழ்கி இறந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக முகமது அப்துல் காதர் கொடுத்த புகாரின் பேரில் ஆத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அய்யப்பன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


