செய்துங்கநல்லூர் பஜாரில் ஆர்.எம்.வீரப்பன் மறைவையொட்டி, அவர் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு முத்துக்கிருஷ்ணன் தலைமை வகித்தார், சுப்பிரமணியன் இலங்காமணி, சுவீட் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செல்லப்பா, குமார், நயினார், மந்திரமூர்த்தி, முருகேசன், பாலகணேசன், ஆறுமுகம், பழனி, மகாராஜன் உள்பட பலர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதற்கான ஏற்பாடுகளை செய்துங்கநல்லூர் சேனை தலைவர் சமுதாய மக்கள் செய்திருந்தனர்.


