ஆழிகுடியில் வெங்கிடாடசலபதி கோயில் மிகவும் மோசமான நிலையில் பழுதடைந்து காணப்பட்டது. இந்த கோயிலில் மிகச்சிறப்பாக திருப்பணி செய்து, கடந்த 48நாள்களுக்கு முன்பு கும்பாபிசேகம் நடந்தது. தற்போது 48 வது நாளான மண்டல நிறைவு பூஜைநடந்தது. இதற்காக காலை 9 மணி முதல் 11.30 மணி வரை சிறப்பு ஹோமம் மற்றும் சாத்து முறை நடந்தது. இதில் ஆழ்வார் ஜீயர் கலந்து கொண்டு அருளாசி வழங்கினார். அதன் பின் அன்னதானம் நடந்தது. மாலை 4 முதல் 6 மணி வரை ஸ்ரீதேவி மற்றும் பூதேவி தாயருடன் முகில் வண்ணப் பெருமாள் புறப்பாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.


