தூத்துக்குடி சிஜிஇ காலனியில் புதிய வடிகால் பணிகள் தொடங்க உள்ள பகுதிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “சிஜிஇ காலனி பகுதியானது கடந்த மழை காலத்தில் மிகவும் பாதிப்படைந்த ஒரு பகுதியாகும். ஆகையால் புதிய வழித்தடத்தில் இந்த வடிகாலினை கொண்டு செல்வதற்கு வாய்ப்பாகவும் அந்த பகுதியில் இருந்து லயன்ஸ் டவுன் வரை சென்ற பழைய பாதை ஒன்றினை தூர்வாரி புதிய சாலை அமைப்பதற்கான பணிகளும் நடைபெற இருக்கின்றது என்றார்.
ஆய்வின்போது, திமுக பகுதி செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ் குமார், வட்ட செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், மாமன்ற உறுப்பினர் முத்துவேல், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் சென்றனர்.


