தூத்துக்குடியில் மீனவர் நெஞ்சு வலியால் உயிரிழந்ததால், 272 விசைப்படகுகள் இன்று கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.
தூத்துக்குடி பாத்திமா நகரை சேர்ந்த ராஜேஷ் (47) என்பவர் நேற்று விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்றுள்ளார். அப்போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சக மீனவர்கள் அவரை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்கள்.
அங்கு சிகிச்சை பெற்றுவந்த அவர் நேற்று இரவு 11 மணிக்கு இறந்துள்ளார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்று (பிப்.10) விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் 272 விசைப்படகுகள் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.


