நெல்லை தாமிரபரணியை மையமாக வைத்து நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு ஆசிரியராக கொண்ட தாமிரபரணி பற்றிய வண்ண புத்தகம் கடந்த மாதம் வெளிவந்து அனைவரின் மத்தியிலும் வரவேற்பை ஏற்படுத்தியது. இந்த நூலை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழக துணை வேந்தர் பிச்சுமணி அவர்களிடம் நூலில் ஆசிரியர் குழுவை சேர்ந்த மதிவாணன் வழங்கினார். எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய வரங்களை அள்ளித்தரும் வல்லநாட்டு சித்தர் என்ற நூலும் துணை வேந்தருக்கு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பேராசிரியர் டாக்டர் சுதாகர், எழுத்தாளர்கள் மதிவாணன், முத்தாலங்குறிச்சி காமராசு. தூத்துக்குடி காமராஜர் கல்லூரி துணை பேராசிரியர் அபிஷ் விக்னேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.