தூத்துக்குடி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு மாவட்டத்தின் 89 மதுபானக் மதுக்கடைகள், பார்களை மூட மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு 17.02.2022, 18.02.2022, 19.02.2022 மற்றும் 22.02.2022 ஆகிய தினங்களில் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 பிரிவு 135C-ன் படி தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சில டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் FL2, FL3 உரிம தலங்களில் அமைந்துள்ள பார்கள் மூடப்பட்டிருக்க வேண்டும்.
மேற்குறிப்பிட்ட தினங்களில் மதுபான விற்பனை, மதுபானத்தை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கடத்துதல், மதுபானத்தை பதுக்கி வைத்தல் போன்ற செயல்கள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது தமிழ்நாடு மதுவிலக்கு அமலாக்க சட்டத்தின் கீழ் கடுமையான குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் மேற்கண்ட நாட்களில் மாவட்டத்தில் உள்ள மாெத்த கடைகளில் 89 மதுக்கடைகள் / பார்கள் மூடப்பட உள்ளது.