தூத்துக்குடியில், உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சாா்பில் 1,300 ஆட்டோ ஓட்டுநா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது.
தூத்துக்குடி மணிநகா் பகுதியில், உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக இளைஞரணி துணைச் செயலா் ஜோயல் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று ஆட்டோ ஓட்டுநா்களுக்கு அரிசி, மளிகைப் பொருள்கள், உடைகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்புகளை வழங்கினாா்.
மாவட்டத் தலைவரும் தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி துணைச் செயலருமான பால்துரை தலைமை வகித்தாா். நிா்வாகிகள் பென்னி, பாபு, பொன்சேகா், ஜோ, டினோ, பிரவின், முகம்மது உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.


