இராசிபுரம். சுப்ரமணியன் ஐயர். மனோகர் அல்லது ஆர். எஸ். மனோகர் பிறப்பு -29 சூன் 1925. பழம்பெரும் நாடக, திரைப்பட நடிகராவார். இவர் இருநூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இராசிபுரம் சுப்ரமணியன் ஐயர் மனோகர், 1925-ஆம் ஆண்டு சூன் 29-ஆம் தேதி அன்றைய சேலம் மாவட்டம், ராசிபுரத்தில், பிரித்தானிய இந்தியா, சென்னை மாகாணத்தில் சுப்ரமணியன் ஐயர் மற்றும் இராசலட்சுமி அம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். இவருடைய இயற்பெயர் லட்சுமிநரசிம்மன் ஆகும். இவர் தன்னுடைய பள்ளிப் பருவத்தில் மனோகரா நாடகத்தில் நடித்ததால், மனோகர் என்னும் பெயர் பெற்றார். இவர் சென்னையிலுள்ள பச்சையப்பன் கல்லூரி முன்னாள் மாணவராவார். இறப்பு – 10 சனவரி 2006.


