சென்னையில் புயல், கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமைச்சர் கீதாஜீவன் நிவாரண பொருட்களை வழங்கினார்.
சென்னையில் மிக்ஜங் புயல், கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநகராட்சி 185வது வார்டுக்கு உட்பட்ட உள்ளகரம் பகுதியில் இன்று மக்களுக்கு நிவாரணப் பொருட்களை சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் உடன், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவன் வழங்கினார்.
தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர்கள் அரவிந்த் ரமேஷ் மார்க்கண்டேயன், மாமன்ற உறுப்பினர் சர்மிளா தேவி, வட்ட செயலாளர்கள் திவாகர், மணிகண்டன், தூத்துக்குடி மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன் உள்ளிட்ட பலர் உடன் சென்றனர்.


