கோனார்குளத்தில் நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் மூலம் காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம் நடைபெற்றது.
தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் தூத்துக்குடி மாவட்டம், காசநோய் பிரிவு மற்றும் டி.வி.எஸ். சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை இணைந்து நடத்தும் நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் மூலம் காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம் வல்லநாடு அருகேயுள்ள கோனார்குளத்தில் நடைபெற்றது.
முகாமினை வட வல்லநாடு ஊராட்சி மன்றத்தலைவர் ச.பேச்சியம்மாள் (எ) பேபி சங்கர் துவக்கி வைத்தார். ஊராட்சி செயலாளர் சங்கரலிங்கம் முன்னிலை வகித்தார்.முதுநிலை காசநோய் ஆய்வுக்கூட மேற்பார்வையாளர் ச.இசக்கி மஹாராஜன் வரவேற்று பேசினார்.டி.வி.எஸ் சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளையின் கள இயக்குனர் விஜயகுமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இம்முகாமில் அனைவருக்கும் இரத்த அழுத்தம், சர்க்கரை அளவு கண்டறியப்பட்டு 60 நபர்களுக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. 60 நபர்களுக்கு சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
வல்லநாடு காசநோய் பிரிவு முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் அ.அப்துல் ரஹீம் ஹீரா நன்றி கூறினார்.
இம்முகாமில் எக்ஸ்ரே நுட்பனர்கள் கிறிஸ்டின் குமாரதாஸ், கிருஷ்டி, சுகாதார பார்வையாளர் ந.முத்து லட்சுமி, நம்பிக்கை மைய ஆற்றுப்படுத்துனர் ஐயம்மாள், ஆய்வக நுட்பனர் உஷாராணி, விளாத்திகுளம் இடைநிலை சுகாதார செவிலியர் செல்வி, சுகாதார தன்னார்வலர் கவிதா, அரி பாலகிருஷ்ணன், டி.வி.எஸ். சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை சமுதாய வளர்ச்சி அலுவலர் பரமசிவம், கிராம வளர்ச்சி அலுவலர் கணேசன், அங்கன்வாடி உதவியாளர் ரெபேக்காள், அங்கன்வாடி பணியாளர் பூமாரி, சுகாதாரத்துறை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை வல்லநாடு காசநோய் பிரிவு மற்றும் டி.வி.எஸ். சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை ஆகியோர்கள் இணைந்து செய்திருந்தார்கள்.


