மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்காக தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் நிவாரண பொருட்களை மேயர் ஜெகன் பெரியசாமி அனுப்பி வைத்தார்.
மிக்ஜாம் புயல் மற்றும் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்காக தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் அரிசி, பிரட், பிஸ்கட், மளிகை பொருட்கள், காய்கறிகள், பால் பாக்கெட், குடிநீர் ஆகியவை நேற்று சென்னைக்கு அனுப்பப்பட்டன. மேயர் ஜெகன் பெரியசாமி கொடியசைத்து வாகனத்தை அனுப்பி வைத்தார்.
இந்நிகழ்வில் மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார் பகுதி கழகச் செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ் குமார், மாமன்ற உறுப்பினர்கள் ஜெயசீலி, திமுக பகுதி செயலாளர் ரவீந்திரன், மாவட்ட சிறுபாண்மை பிரிவு துணை அமைப்பாளர் மரிய அந்தோணி, மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கல்நது கொண்டனர்.


