தூத்துக்குடியில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக மாநகர செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் மாநில பொது குழு உறுப்பினர் மற்றும் ஐஎன்டியூசி மாநில பொதுச் செயலாளர் கே.பெருமாள் சாமி தலைமை தாங்கினார். இந்நிகழ்வில் அகில இந்திய காங்கிரஸ் ஒர்க்கர்ஸ் கமிட்டி தூத்துக்குடி மாவட்ட தலைவர் ஜெயக்கொடி, வடக்கு மண்டல தலைவர் சேகர், கிழக்கு மண்டல தலைவர் ஐசன் சில்வா, மண்டல தலைவர் தங்கராஜ், DCTU மாநில செயலாளர் ஆடிட்டர் சிவராஜ் மோகன்,
பழங்குடியினர் பிரிவு மாநில செயலாளர் முனியசாமி மாநகர செயலாளர் இக்னேசியஸ் மாநகரச் செயலாளர் கோபால், மீனவர் அணி மிக்கேல் குரூஸ், எஸ்சி/எஸ்டி பிரிவு முன்னாள் மாவட்ட தலைவர் ராஜாராம், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு பிரதீப் தினகரன், எஸ்சி/எஸ்டி மாநில ஒருங்கிணைப்பாளர் பிரபு, கண்ணன் ஐஎன்டியூசி, சேகர், சுரேஷ்குமார், தையல் மனோகரன், ரூஸ்வெல்ட் உட்பட டபர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், மறைந்த முன்னாள் மாவட்ட தலைவர் முத்துக்குட்டி-க்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் அனைத்து வார்டுகளிலும் உறுப்பினர் சேர்க்கை மற்றும் பூத் கமிட்டி அமைப்பது, காங்கிரஸ் கட்சியை கலங்கப்படுத்தும் பாஜகவை கண்டித்து தூத்துக்குடியில் மாபெரும் பொதுக்கூட்டம் நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


