பெரும்பாலுமே எழுத்தாளர்கள் மற்றும் கல்வியாளர்களை மதிப்பதில் ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ ஊர்வசி அமிர்த்தராஜ் அவர்கள் அலாதி பிரியம் கொண்டவர். கல்விக்காக தொகுதி மாணவர்களுக்கு இலவச உதவி செய்வது, அரசு தேர்வுக்கு தொகுதியில் மூன்று இடத்தில் இலவச பயிற்சி வகுப்பு நடத்துவது என தொடர்ந்து கல்வி பணியை தனது சொந்த செலவில் ஆற்றி வருகிறார். இவர் நடத்தும் நிகழ்ச்சியிலும் கல்வியாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். குறிப்பாக கடந்த வாரம் தூத்துக்குடி மாணிக்கம் மகாலில் ஊர்வசி அமிர்த்தராஜ் அவர்கள் நடத்திய கட்சி கூட்டத்தில் வந்திருந்த தலைவர்களுக்கு நூல்களை பரிசாக வழங்கினார். அதில் மகாத்மா காந்தி, காமராஜர் புத்தகத்துடன் நான் எழுதிய புத்தங்களையும் வழங்கினார். இவரின் இந்த செயல் உள்ளூர் எழுத்தாளர்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது.
இந்த விழாவில் நான் எழுதிய ஆதிச்சநல்லூரும், தாமிரபரணியும், அறியப்படாத தியாகிகளும், தூத்துக்குடி பெருமையும் எம்.எல்.ஏ அவர்கள் முயற்சியில் காங்கிரஸ் மாநில தலைவர் அழகிரி அய்யா, தனுஷகோடி ஆதித்தன் அய்யா, மாணக்க தாகூர் அய்யா போன்ற தலைவர்கள் கையில் கிடைத்தது. இதை விட எழுத்தாளர்களுக்கு வேறென்ன வேணும். மிக்க நன்றி ஊர்வசி அமிர்த்தராஜ் எம்.எல்.ஏ அவர்களே – அன்புடன் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு


