ஸ்ரீவைகுண்டம் அருகில் உள்ள பெருங்குளத்தில் வல்லநாடு இளைய சித்தர் சாது சிவா சுவாமிகள் நான்காம் ஆண்டு குருபூஜை நடந்தது. வடலூர் இராமலிங்க சுவாமிகளின் சுத்த சன்மார்க்க திருமுறைபடி வல்லநாடு சித்தர் சாது சிதம்பர சுவாமிகளின் தொண்டர்கள் முன்னிலையில் குருபூஜை நடந்தது. இதையொட்டி காலை 6 மணிக்கு அபிசேகம், 7 மணிக்கு கூழ் பூஜை, 8 மணிக்கு அகவல் பாராயணம், 9 மணிக்கு சமத்துவ விருந்து, 12 மணிக்கு குருபூஜை ஆராதனை, நடைபெற்றது. அதன் பின் மாலை 5.30மணிக்கு கோ பூஜை, 6 மணிக்கு நவக்கிரக ஜோதி வழிபாடு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சுவாமி பத்மேந்திரா சிறப்புரை யாற்றினார். மழையூர் சதா சிவம் ஐயா அருட்பா இன்னிசை நடைபெற்றது. காலை முதல் இரவு வரை தொடர்ந்து அன்னதானம் நடைப்பெற்றது.. நிகழ்வில் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திண்டுக்கல், மதுரை, தேனி, தென்காசி, கடலூர் (வடலூர்) மாவட்ட சன்மார்க்க சான்றோர்கள் பெரியோர்கள் சாது சிவா சுவாமிகள் தொண்டர்குலத்தினர் கலந்து கொண்டு வழிபட்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை சாது சிதம்பர சுவாமிகள் தொண்டர் குலம் , நற்கருங்குழி அருட்பா இசை சங்கத்தினர் செய்திருந்தனர்.


