தூத்துக்குடியில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1 கோடியே 52 இலட்சம் மதிப்பிலான கடனுதவிகளை கனிமொழி எம்பி வழங்கினார்.
தூத்துக்குடி – எட்டயபுரம் சாலையில் உள்ள, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் நடைபெற்ற “கலைஞர் கனவு இல்லம்” திட்ட கடன் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் விழாவில் கலந்துகொண்டு, 10 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 1 கோடியே 52 இலட்சம் மதிப்பிலான கடனுதவி மற்றும் 8 பயனாளிகளுக்கு கலைஞர் கனவு இல்லம் திட்ட கடனுதவி ஆகியவற்றை கனிமொழி எம்பி வழங்கினார்.விழாவில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.