தூத்துக்குடி தாளமுத்துநகா் திவ்ய தஸ்நேவிஸ் மாதா ஆலயத் திருவிழா நேற்று மாலை கொடியேற்றதுடன் துவங்கியது.
தூத்துக்குடி தாளமுத்துநகா் திவ்ய தஸ்நேவிஸ் மாதா ஆலயத்தில் 44 ஆம் ஆண்டு திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்ற திருப்பலியில் பள்ளிகளின் கண்காணிப்பாளர் ஸ்டாலின் தலைமையில் அருட்தந்தையர்கள் ஜஸ்டின், அமலன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருவிழாவின் தினமும் மாலை 6.30க்கு ஜெபமாலையும் 7 மணிக்கு திருப்பலியும் நடைபெறும். திருவிழாவின் சிறப்பு நிகழ்வான 10 ஆம் திருவிழா 17.08.2024 சனிக்கிழமை மாலை ஆராதனை தருவைக்குளம் பங்குதந்தை வின்சென்ட் மறையுரையாற்றுகிறார். அன்னையின் பெருவிழா 18.08.2024 ஞாயிறு காலை 7 மணிக்கு ஆடம்பர திருவிழா கூட்டுத்திருப்பலி நடக்கிறது.
அருட்பணி ரெக்ஸ் தலைமையில் அருட்பணி ராயப்பன் மறையுரை ஆற்றுகிறார். மாலை 5 மணிக்கு அன்னையின் திரு உருவ தேர்பவனி நடைபெறுகிறது. திருவிழா ஏற்பாடுகளை தாளமுத்துநகர் பங்குதந்தை நெல்சன்ராஜ், உதவி பங்குதந்தை பாலன், மற்றும் ஆலய நிர்வாகிகள், திருஇருதய அருட்சகோதரிகள் மற்றும் மாதா நகர் இறைமக்கள் செய்து வருகின்றனர்.


