தூத்துக்குடி மாவட்டத்தில் வட்டாட்சியர் நிலையில், நிர்வாக நலன்கருதி பணியிட மாறுதல்களும், நியமனங்களும் செய்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி தூத்துக்குடி சிப்காட் அல்லிகுளம் நிலம் எடுப்பு முன்னாள் தனி தாசில்தார் சந்திரன் விடுப்பில் இருந்தார். அவர், சிப்காட் தனி மாவட்ட வருவாய் அலுவலகத்தில் தனி தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார். சிப்காட் தனி தாசில்தாராக இருந்த தங்கையா கயத்தாறு தாசில்தாராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
சிப்காட் அல்லிகுளத்தில் முன்பு தனி தாசில்தாராக இருந்த எஸ்.சேதுராமன் தற்போது விடுப்பு முடிந்து மீண்டும் பணிக்கு வந்த நிலையில், தூத்துக்குடி-மதுரை புதிய அகல ரெயில் பாதை திட்டத்திற்கு நிலம் எடுப்பு தனி தாசில்தாராக நியமிக்கப்பட்டு உள்ளார். இங்கு பணியில் இருந்த ராஜசெல்வி தூத்துக்குடி சிப்காட் அல்லிகுளம் அலகு 8-ல் தனி தாசில்தாராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
இம்மாறுதல் குறித்து எவ்வித மேல்முறையீடும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. உடனடியாக புதிய பணியிடத்தில் பணியேற்க வேண்டும். பணியேற்பிடைக் காலத்திற்குள் பணியேற்காது போனால், மேற்படி நாட்கள் ஊதியமில்லா விடுப்பாக வரன்முறைப்படுத்தப்படும். தனியர் மேற்படி பணியிடத்தில் பணியில் சேர்ந்த விவரத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


