தூத்துக்குடி மாவட்ட உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு. பாட்டீல் கிருஷ்ணா பபுருவான், இ.ஆ.ப., அவர்கள் மாவட்டத்தின் முக்கிய வரலாற்று மற்றும் தொல்லியல் சிறப்புமிக்க பகுதிகளான கொற்கை, சிவகளை மற்றும் ஆதிச்சநல்லூர் ஆகிய இடங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது, அப்பகுதிகளில் நடைபெற்று வரும் தொல்லியல் தோண்டுதல் பணிகளைப் (Excavation Works) பார்வையிட்டு ஆய்வு செய்த அவர், அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் இதர பாதுகாப்பு மற்றும் பராமரிப்புப் பணிகளையும் (Maintaining Works) விரிவாகப் பரிசீலித்தார்.

தொடர்ந்து பேசிய உதவி ஆட்சியர் அவர்கள், வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தத் தொல்லியல் தளங்கள் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை மிகவும் தூய்மையாகவும் பொலிவாகவும் பராமரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். மேலும், இப்பகுதிகளுக்கு வரும் பொதுமக்களிடமும், சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் அனைவரும் நற்பண்புகளுடனும், கண்ணியத்துடனும் (Good Manners) நடந்து கொள்வதை உறுதி செய்ய வேண்டும் என்றும், தூய்மையையும் ஒழுக்கத்தையும் பேணிக்காக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கும் உள்ளூர் பொதுமக்களுக்கும் கேட்டுக்கொண்டார்.


