தூத்துக்குடியில் குழந்தைகளுக்கு புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துவதை வலியுறுத்தி பொம்மலாட்டம் மூலம் விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.
தூத்துக்குடி தருவைக்குளத்தில் குழந்தைகளுக்கான விடுமுறை வேதாகம பள்ளி நிகழ்வு நடைபெற்றது. பங்குதந்தை வின்சென்ட் அடிகளார் ஆசியிரை வழங்கினார். சிறார்களிடையே அலைபேசி பயன்படுத்துவதை தவிர்த்து புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துவதை வலியுறுத்தி புத்தக வாசிப்பு நற்பணி மன்றம், கலையின் குரல் அமைப்பு மற்றும் குமிழ் முனை புத்தக வாசிப்பு வண்டி இணைந்து பொம்மலாட்ட கலை நிகழ்ச்சி குழு சார்பில் நடைபெற்றது.
பொம்மலாட்ட குழுவில் அரங்கம் மற்றும் நாட்டுப்புற கலைப் பயிற்றுநர் கலைவளர்மணி ப.சக்தவேல், குமிழ்முனை சைமன், வீதிநாடகக் கலைஞர் அருண்பாமா, எழுத்தாளர் ஆ.மாரிமுத்து ஆகியோர் சிறார்களுக்கு பொம்மலாட்டம் நிகழ்வு நடத்திக் காட்டி மகிழ்வித்தனர். இந்நிகழ்வில் திரளனான குழந்தைகள் கலந்து கொண்டனர். நிகழ்வுக்கான ஏற்பாடுகளை பங்குதந்தை, அருட்சகோதரிகள், சபை மக்கள், ஊர் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


