விளாத்திகுளத்தில் திமுக சார்பில் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆட்சியின் 2ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.
தூத்துக்குடி வடக்கு மாவட்டம், விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய திமுக சார்பில், வீரபாண்டியபுரம் கிராமத்தில் .தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் கீதா ஜீவன் கலந்து கொண்டு கழக அரசின் சாதனைகள் குறித்து பொதுமக்களிடம் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினரும், தலைமை செயற்குழு உறுப்பினருமான மார்கண்டேயன் தலைமை வகித்தார்.
கூட்டத்தில் விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் நடராஜன் விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யா அய்யன்ராஜ் ஒன்றிய அவைத்தலைவர் அருள்ராஜ் வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் இம்மானுவேல், மகேந்திரன், டேவிட்ராஜ் மாவட்ட பிரதிநிதிகள் புதுராஜா, ஆதிசங்கர் ராஜ், ஊராட்சி மன்ற தலைவர் லெக்கம்மாள், ஒன்றிய துணைச் செயலாளர்கள் காளிராஜ், சரவண செல்வி, தமிழ்வாணன் ஒன்றிய பொருளாளர் ராகவன் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அருண்குமார் உட்பட கிளை செயலாளர்கள், அணி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


