கயத்தாறு அருகே பனைத் தொழிலாளியை காவல் நிலையத்தில் வைத்து சித்ரவதைசெய்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு பனைத் தொழிலாளர் நலவாரிய உறுப்பின் காட்சன் சாமுவேல் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனுவில் “கயத்தாறு அருகிலுள்ள தலையால் நடந்தான் குளத்தில் பனைத்தொழில் செய்தாரும், மாடசாமி (55) என்பவரை கடந்த ஏப்ரல் 23, 2023 அன்று காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று பொய் வழக்கு போடப்பட்டுள்ளது. மாடசாமி, பதனீர் இறக்கி கருப்பட்டி காய்ந்து தொழில் செய்து வருகிறார். கள் இறக்குவது கிடையாது.
பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட அவரை இரவு 9 மணியளவில் மீண்டும் காவல் நிலையத்திற்கு அழைத்து உதவி ஆய்வாளர் திலீபன் என்பவர் கண்மூடித் தனமாக தக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவர் கடந்த 7 நாட்களாக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். பனைத் தொழிலாளி மாடசாமி மீது தாக்குதல் நடத்திய காவல் துறையினர் மீது மனித உரிமை மீறல் நடவடிக்கை எடுக்கவும், எதிர்காலத்தில் பனைத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், சுய மரியாதையுடன் வாழவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.


