திருநெல்வேலி மாவட்டம் தெ.கள்ளிகுளம் திருநெல்வேலி தெக்ஷண மாற நாடார் சங்கம் கல்லூரி தமிழ்த்துறை சுயநிதிப் பிரிவு தலைவி பேரா.சு கிரிஜா அவர்களுக்கு மக்கள் சேவகர் தமிழக முதல்வர் திருமிகு ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளையொட்டி தளபதியின் பொற்கால விருதுகள் – 2022- இல் திண்டுக்கல் பசுமை வாசல் பவுண்டேசன், குமரி தமிழ்நாடு பனைமரம் காக்கும் பாதுகாப்பு இயக்கம், திண்டுக்கல் சுபம் கம்பன் கழகம் சார்பில் செம்மொழிச் செல்வர் விருதும் சூரியனின் விடியல் விருதுகள் – 2022 இல்அறம் அன்பின் அடையாளம் அறக்கட்டளை சார்பில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் கையெழுத்திட்ட மொழிச் செம்மல் விருதும் வழங்கப்பட்டது. இவ்விருதுகள் அவருக்கு சிறந்த பேராசிரியராகப் பணியாற்றி தமிழ்ப் பணி செய்து வருவதற்காகவும் துறை | சார்ந்த பல்வேறு விருதுகள் பெற்றதற்காகவும் வழங்கி சிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவரை கல்லூரி நிர்வாகம், முதல்வர் மற்றும் பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவ மாணவிகள் பாரட்டினார்கள்.
தமிழக அரசின் தமிழ்ச் செம்மல் விருதாளர் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு அவர்களும் வாழ்த்தினார்.


