குளத்தூரில் ரூ.23.70-லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தினை மார்கண்டேயன் எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம், குளத்தூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.23.70-லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர் தங்கவேல், ஒன்றிய பொறியாளர் அலெக்ஸ், விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இம்மானுவேல், குளத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் மாலதி, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மாரிச்செல்வி, விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய அவைத்தலைவர் கெங்குமணி, விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய பொருளாளர் முனியசாமி, ஒன்றிய துணைச் செயலாளர் ராஜபாண்டியன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் ராஜேந்திரன், குருநாதன் தகவல் தொழில்நுட்ப அணி ஸ்ரீதர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


