ஆறாம்பண்ணை மற்றும் கொங்கராயகுறிச்சியில் பொங்கல் பரிசு மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கத் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆறாம்பண்ணையில் தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசு மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்க தொகை வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது.
ஆறாம்பண்ணை ஊராட்சியில் அமைந்துள்ள நியாயவிலைகடையில் வைத்து பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு ஆறாம்பண்ணை பஞ்சாயத்து தலைவர் சேக் அப்துல் காதர் தலைமை வகித்தார். ஆழ்வார்கற்குளம் கூட்டுறவு வேளாண் கடன் சங்கம் தலைவர் ஐயாத்துரை பாண்டியன்முன்னிலை வகித்தார். கருங்குளம் ஊராட்சி ஒன்றிய சேர்மன் கோமதி ராஜேந்திரன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசு மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்க தொகை வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் ஆறாம்பண்ணை பள்ளிவாசல் செயலாளர் அப்துல்கனி, வார்டு உறுப்பினர் இப்ராஹிம், நியாய விலை கடை ஊழியர் சீனி, கருங்குளம் ஒன்றிய திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் அப்துல்கரீம், ஆறாம்பண்ணை காங்கிரஸ் நிர்வாகிகள் மைதீன் பிள்ளை, மாரியப்பன், இப்ராஹிம், ஜின்னா, அப்துல்காதர், வக்கீல் சங்க நிர்வாகி பாஹிம் மற்றும் ஊர்பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து கொங்கராயகுறிச்சி நியாயவிலைகடையில் பொங்கல் பரிசுத்த தொகுப்பு வழங்கப்பட்டது. இதில் கொங்கராயகுறிச்சி நியாய விலை கடை ஊழியர் ஆழ்வார், ஒன்றிய கவுன்சிலர் மைமுன் அப்துல் கரீம், கொங்கராயகுறிச்சி பஞ்சாயத்து தலைவர் ஆபிதா அப்துல் சலாம், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஜாகிர்உசேன் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
அதைத்தொடர்ந்து ஆழ்வார்கற்குளம் நியாயவிலைகடையில் பொங்கல் பரிசு தொப்பு வழங்கப்பட்டது. இதில் நியாயவிலைகடை ஊழியர் உலகநாதன், ஆழ்வார்கற்குளம் பஞ்சாயத்து தலைவர் மணிமேகலை, ஒன்றிய கவுன்சிலர் வசந்தி முருகன், திமுக கிளைச்செயலாளர் அருணா மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


