திருக்காம்புலியூர் ரங்க ராமச்சந்திரன் (9 ஜனவரி 1917 – 30 நவம்பர் 1990) ஒரு இந்திய நடிகர் மற்றும் நகைச்சுவை நடிகர் ஆவார், அவர் முக்கியமாக தமிழ் திரைப்படங்களில் நடித்தார். 1940 களில் இருந்து 1960 கள் வரை அவர் பெரும்பாலும் முன்னணி அல்லது ஆதரவான பாத்திரங்களில் நடித்தார். அவரது தனித்துவமான சாஸர்-கண்களுக்கு பெயர் பெற்ற ராமச்சந்திரன் ” இந்தியாவின் எடி கேன்டர் ” என்று அழைக்கப்பட்டார் .
டி. ஆர். இராமச்சந்திரன் பழம்பெரும் தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். கிட்டத்தட்ட 150 திரைப்படங்களில் கதாநாயகனாகவும், பிற முக்கிய வேடங்களிலும், துணை வேடங்களிலும் நடித்துள்ளார். எந்த வேடத்தில் நடித்தாலும், நகைச்சுவை நடிகராகவே இவரின் நடிப்பு பெரும்பாலும் அமைந்திருந்தது.
இராமச்சந்திரனின் கரூர் மாவட்டத்திலுள்ள திருக்காம்புலியூரில் விவசாயியாக இருந்த ரங்காராவ், ரங்கம்மாள் ஆகியோருக்கு 1917 சனவரி 9 இல் பிறந்தார். இவருக்கு இரு சகோதரர்கள். நான்கு வயதிலேயே தாய் இறக்கவே தந்தை மறுமணம் செய்து கொண்டார். இராமச்சந்திரன் பாட்டியாரின் ஊரான குளித்தலையில் உள்ள பள்ளிக்கூடத்தில் படித்தார்.
ராமச்சந்திரன் 1954 ஆம் ஆண்டில் சொந்தத்தில் படக்கம்பெனி தொடங்கி ‘பொன் வயல்’ என்ற படத்தைத் தயாரித்தார். இதில், ராமச்சந்திரனின் ஜோடியாக அஞ்சலிதேவி நடித்தார். இத்திரைப்படத்திலேயே சீர்காழி கோவிந்தராஜன் பின்னணிப் பாடகராக அறிமுகமானார். எழுத்தாளர் தேவன் எழுதிய கோமதியின் காதலன் என்ற கதையை அதே பெயரில் திரைப்படமாகத் தயாரித்து, சாவித்திரியுடன் சோடியாக நடித்தார்.


