தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் ஆறாம் பண்ணை ஊராட்சியில் ரூபாய் ஏழு லட்சத்தி 73 ஆயிரத்து 740 ரூபாய் செலவில் புதிய டிரான்ஸ்பார்ம் திறப்பு விழா நடந்தது. தூத்துக்குடி மாவட்ட மேற்பார்வை பொறியாளர் குருவம்மாள் தலைமை வகித்தார்.

உதவி பொறியாளர் சுரேஷ்குமார். உதவி பொறியாளர் முரசொலி மாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆறாம் பண்ணை ஊராட்சி மன்ற தலைவர் சேக் அப்துல் காதர் புதிய டிரான்ஸ்பார்மரை திறந்து வைத்தார். .ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அப்துல் கனி. வார்டு உறுப்பினர்கள் இப்ராஹிம். மரியம் பானு, கருங்குளம் தெற்கு ஒன்றியதிமுக செயலாளர்இசக்கி பாண்டி. போர் மேன் ராஜகோபால், மற்றும் மின்வாரிய ஊழியர்கள். மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர் புதிய டிரான்ஸ்பார்ம் திறந்ததை ஒட்டி இரவு நேரங்களில் குறைவான மின்னழுத்தம் இனி ஆறாம்பண்ணையில் தொடராது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


