‘மக்களுடன் முதல்வர்” சிறப்பு முகாமிற்கு நியமிக்கப்பட்டுள்ள அலுவலர்களுக்கு தூத்துக்குடி மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் ஆலோசனைகளை வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் 11.12.2023 முதல் 29.12.2023 வரை ‘மக்களுடன் முதல்வர்” என்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் சிறப்பு முகாம் தூத்துக்குடி மாநகராட்சி, கோவில்பட்டி, திருச்செந்தூர் பேரூராட்சி மற்றும் சாத்தான்குளம் சிறப்பு நிலை பேரூராட்சி ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ளது. முகாமில் பல்வேறு துறைகளிலிருந்தும் பணியாற்ற உள்ளார்கள். இதில் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக 58 உதவி ஆய்வாளர்கள் சிறப்பு அலுவலர்களாகவும் மற்றும் 46 கணிணி விபர உதவியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
முகாமில் காவல்துறைக்கு வரையறுக்கப்பட்டுள்ள சேவைகளுக்கான மனுக்களை பெற்று CM Helpline Portalல் பதிவேற்றம் செய்வது குறித்தும், முகாமில் அவர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் அறிவுரைகள் வழங்கினார். இதில் தூத்துக்குடி சைபர் குற்றப் பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் உன்னி கிருஷ்ணன், தூத்துக்குடி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சத்தியராஜ், அமைச்சுப்பணி உதவியாளர் மரிய அந்தோணி சகிலா உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.


