ஸ்ரீவைகுண்டத்தில் புதியதாக நிறுவப்பட்டுள்ள பசும்பொன் முத்துராமலிங்கத்தேவருக்கு வென்கல சிலை அமைத்து நடைபெறும் 40வது நாள் மண்டல பூஜையில் கால்வாய் கிராம மக்கள் அலகு குத்தி வழிபட்டனர்.
ஸ்ரீவைகுண்டம் பஸ் நிலையம் அருகே சுதந்திர போராட்ட தியாகி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு கல்மண்டபத்துடன் முழுஉருவ வெண்கல சிலை புதியதாக அமைக்கப்பட்டுள்ளது.
புதிய சிலை திறக்கப்பட்டுள்ளதைத்தொடர்ந்து, அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் முத்துராமலிங்கத் தேவரின்
115வது ஆண்டு ஜெயந்தி விழா ஸ்ரீவைகுண்டத்தில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது-.
இதையடுத்து,
41நாட்கள் கணக்கிடப்பட்டு நாள்தோறும் மாலையில் மண்டல பூஜைக்கான சிறப்பு வழிபாடுகள் அகில இந்திய பார்வர்டு பிளாக் மாநில இளைஞரணி தலைவர் ஶ்ரீவை சுரேஷ் தலைமையில் நடத்தப்பட்டு வருகிறது.
சுற்றுவட்டாரத்தில் உள்ள வெள்ளூர், புதுக்குடி, தோழப்பண்பண்ணை, பத்மநாபமங்கலம், திருப்புளியங்குடி, பேரூர், பெருங்குளம் உள்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் சார்பில் தினந்தோறும் மண்டல பூஜை நடைபெற்று வருகிறது.
சமூக நல்லுறவை வலியுறுத்தும் விதமாக தெற்கு
தோழப்பன்பண்ணை தேவேந்திர குல வேளாளர் சமுதாய மக்கள் சார்பாகவும் மண்டல பூஜை நடைபெற்றது.
இந்நிலையில், நேற்று கால்வாய் கிராமம் சார்பில் 40வது நாள் மண்டல பூஜை நடைபெற்றது. இதில் பல்வேறு கலைநிகழ்ச்சிகளுடன் அலகு குத்தியும் முளைப்பாரி எடுத்தும் பால்குடம் எடுத்தும் வழிபட்டனர்.
தொடர்ந்து நடைபெறும் இந்த மண்டல பூஜை வழிபாட்டின் இறுதி நாளான இன்று(டிச. 8) நடைபெறும் 41வது நாள் மண்டல பூஜை அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் மிகப்பிரம்மாண்டமான முறையில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகிறது.
இதில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியை சேர்ந்த நிர்வாகிகளும் பல்வேறு முக்கிய பிரமுகர்களும் கலந்து கொள்கின்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி மாநில இளைஞரணி தலைவர் ஸ்ரீவை சுரேஷ்தேவர் தலைமையில் நிர்வாகிகள், உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.


