தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டம் சைபர் குற்றப்பிரிவு ஏடிஎஸ்பி உன்னிகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.
தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் உத்தரவின்படி ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை தோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் உன்னிகிருஷ்ணன் தலைமையில் குறைதீர்க்கும் மனு கூட்டம் நடைபெற்றது.
இதில், மாவட்டத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளித்த 3 மனுதாரர்கள் மற்றும் புதிதாக மனு கொடுக்க வந்த 25 மனுதாரர்கள் என மொத்தம் 28 மனுதாரர்கள் தங்கள் குறைகளை நேரடியாக தெரிவித்து புகார் மனு அளித்தனர். பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


