தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது.
தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழாவில் வ.உ.சி. கல்வியியல் கல்லூரி முதல்வர் கனகராஜ் கலந்து கொண்டு, மாணவ- மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார். விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் தட்சிணாமூர்த்தி, பாலசுந்தர கணபதி, சுப்ரமணிய சுபாஷ் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.


