மதுரை கோட்ட ரயில்வேக்கு உள்பட்ட பகுதிகளில் தண்டவாள பராமரிப்பு பணிக்காக நெல்லை, திருச்செந்தூர் பாசஞ்சர் ரயில்கள் உள்ளிட்ட தென்மாவட்ட ரயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மதுரை கோட்ட ரயில்வேக்கு உள்பட்ட பகுதிகளில் நடந்து வரும் தண்டவாள பராமரிப்பு பணிக்காக நெல்லை, திருச்செந்தூர் பாசஞ்சர் ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, நெல்லை-திருச்செந்தூர் பாசஞ்சர் ரயில் (வ.எண்.56003) வருகிற 22-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை, 28-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மறுமார்க்கத்தில் திருச்செந்தூர்-நெல்லை பாசஞ்சர் ரயில் (வ.எண்.56004) மேற்கண்ட நாட்களில் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
செங்கோட்டை-நெல்லை பாசஞ்சர் ரயில்(வ.எண்.56742) வருகிற 22-ஆம்தேதி முதல் 25-ஆம்தேதி வரை, வருகிற 28-ஆம்தேதி முதல் 30-ஆம்தேதி வரை சேரன்மாதேவி வரை மட்டும் இயக்கப்படும். மறுமார்க்கத்தில் இந்த ரயில் (வ.எண்.56743) மேற்கண்ட நாட்களில் நெல்லையில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக சேரன்மாதேவி ரயில் நிலையத்தில் இருந்து வழக்கமான நேரத்துக்கு புறப்படும்.
அதேபோல, செங்கோட்டை-மயிலாடுதுறை ரயில் (வ.எண்.16848) வருகிற 10-ஆம்தேதி மற்றும் 24-ஆம்தேதிகளில் மதுரையில் இருந்து மானாமதுரை, காரைக்குடி வழியாக மாற்றுப்பாதையில் திருச்சி செல்லும். இந்த ரயில் சிவகங்கை, தேவகோட்டை ரோடு, காரைக்குடி, புதுக்கோட்டை, கீரனூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். நாகர்கோவில்-மும்பை எக்ஸ்பிரஸ் ரயில் (வ.எண்.16352) வருகிற 10-ஆம் தேதி மற்றும் 24-ஆம் தேதிகளில் விருதுநகரில் இருந்து மானாமதுரை, காரைக்குடி வழியாக திருச்சி செல்லும்.
நாகர்கோவில்-கோவை ரயில் (வ.எண்.16321) வருகிற 14-ஆம் தேதி, 19-ஆம் தேதி, 21-ஆம் தேதி, 22-ஆம் தேதி, அடுத்த மாதம் 5-ஆம் தேதி, 6-ஆம் தேதி, 8-ஆம்தேதி, 9-ஆம்தேதிகளில் விருதுநகரில் இருந்து மானாமதுரை, காரைக்குடி வழியாக மாற்றுப்பாதையில் திருச்சி, கரூர் செல்லும்.
நாகர்கோவில்-கச்சிகுடா எக்ஸ்பிரஸ் ரயில் (வ.எண்.16354) வருகிற 5-ஆம்தேதி மற்றும் 19-ஆம்தேதிகளில் விருதுநகரில் இருந்து மானாமதுரை, காரைக்குடி வழியாக மாற்றுப்பாதையில் திருச்சி செல்லும். இந்த ரயில் வருகிற 26-ஆம் தேதி மற்றும் அடுத்த மாதம் 3-ஆம் தேதிகளில் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் இருந்து திருச்சி வழியாக செல்லாமல் நேரடியாக கரூர் செல்லும்.


