வாரத்தில் 5 நாள் வேலை, ஊதியத்திற்கான 3% நிபந்தனை நீக்கம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டுறவு வீட்டுவசதி சங்க ஊழியர்கள் பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கூட்டுறவு சங்கங்களுக்கு வாரத்திற்கு 5 நாள் வேலை அறிவிக்க வேண்டும், தமிழக அரசு நிலுவையில் உள்ள ஊதிய ஒப்பந்தங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும், ஊதியத்திற்கான 3% நிபந்தனையை நீக்க வேண்டும், ஓய்வூதியம், நிலுவைச் சம்பளம், 5113 பத்திரங்களை வழங்க வேண்டும், டிஎன்பிஎஸ்சி மூலம் பணி நியமனம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களின் ஊழியர் அசோசியேசன் (TUCHSEA) சார்பில் இன்று கோரிக்கை நாள் கடைபிடிக்கப்படுகிறது.
இதையொட்டி திருநெல்வேலி மண்டல பொதுச்செயலாளர் எம். மந்திர கணேஷ் தலைமையில் தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள 58 கூட்டுறவு வீட்டு வசதி சங்கசங்கப் பணியாளர்கள் பேட்ஜ் பணியாற்றி வருகின்றனர்.


