தூத்துக்குடியில் தங்கியுள்ள வெளிமாநில தொழிலாளர்களிடம் தேசிய புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பயங்கரவாத அமைப்புகளுக்கு உதவி செய்வதாகக் கிடைத்தத் தகவலின் அடிப்படையில் தூத்துக்குடி உள்பட நாடு முழுவதும் ஐந்து மாநிலங்களில் 22 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு சோதனையில் ஈடுபட்டு வருகிறது. இதன்படி தூத்துக்குடியில் சுனாமி காலனி குடியிருப்பு பகுதியில் தங்கியிருக்கும் பீகாரைச் சேர்ந்த தொழிலாளர்களிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுபோல் நாடு முழுவதும் ஐந்து மாநிலங்களில் 22 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ஜம்மு-காஷ்மீரில் ஒன்பது இடங்களில் சோதனை நடப்பதாகவும், பிகாரில் எட்டு இடங்களிலும், உத்தரப்பிரதேசத்தில் இரண்டு இடங்களிலும், தமிழ்நாடு, கர்நாடகம், மகாராஷ்டிர மாநிலங்களில் தலா ஒரு இடத்தில் சோதனை நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


