சுதந்திர தின விழாவை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக, 4 சிறப்பு ரயில்களை இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சென்னை – செங்கோட்டை இடையேயான சிறப்பு ரயில் ஆகஸ்ட் 14 அன்று, சென்னை எழும்பூரில் இருந்து சிறப்பு ரயில் வண்டி எண் 06089 இரவு 9:55 மணிக்குக் புறப்பட்டு மறுநாள் 15 ந் தேதி காலை 9:15 மணிக்கு திருநெல்வேலி வந்தடையும், இங்கிருந்து காலை 9:25 மணிக்கு புறப்பட்டு காலை 11:30 மணிக்குச் செங்கோட்டை வந்தடையும். மறுமார்க்கமாக, ஆகஸ்ட் 17 அன்று, செங்கோட்டையில் இருந்து சிறப்பு ரயில் வண்டி எண் 06090 இரவு 7:45 மணிக்குக் புறப்பட்டு இரவு 9:30 மணிக்கு திருநெல்வேலி வந்தடையும், அங்கிருந்து இரவு 10:40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் 18ந் தேதி காலை 9:05 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடைகிறது.
நாகர்கோவில் – தாம்பரம் சிறப்பு ரயில் ஆகஸ்ட் 17 அன்று, நாகர்கோவிலில் இருந்து அதிவிரைவு சிறப்பு ரயில் வண்டி எண் 06012 ,இரவு 11:15 மணிக்குக் புறப்பட்டு திருநெல்வேலிக்கு 18 ந் தேதி அதிகாலை 00:35 மணிக்கு வந்தடையும், பின்னர் அங்கிருந்து 00:42 மணிக்கு புறப்பட்டு அன்று 18 ந் தேதி காலை 10:55 மணிக்குத் தாம்பரம் சென்றடையும்.
மறுமார்க்கத்தில் ஆகஸ்ட் 18 அன்று, தாம்பரத்தில் இருந்து சிறப்பு ரயில் வண்டி எண் 06011 மதியம் 3:30 மணிக்குக் புறப்பட்டு மறுநாள் 19 ந் தேதி அதிகாலை 3:35 மணிக்கு திருநெல்வேலி வந்தடையும், அங்கிருந்து 3:40 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 5:15 மணிக்கு நாகர்கோவில் வந்தடையும். இந்த சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு, இன்று ஆகஸ்ட் 8-ந் தேதி காலை 8:00 மணிக்குத் தொடங்குவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.


