தூத்துக்குடி மில்லர்புரம் இரட்டை பாலம் அருகில் வடிகாலில் மணல் திட்டுகள் அகற்றும் பணி தொடர்பாக மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் தெரிவிக்கையில், “தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த காலங்களைப் போல மழை நீர் மாநகரப் பகுதிகளில் தேங்காமல் இருக்கும் வண்ணம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம். அதன் ஒரு பகுதியாக மில்லர்புரம் இரட்டை பாலம் அருகில் உள்ள வடிகாலில் மணல் திட்டுகள் தடையாக இருப்பதாக வந்த பொதுமக்களின் கோரிக்கையிணைத் தொடர்ந்து அந்தப் பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்தேன் என்று தெரிவித்தார்.
ஆய்வின் போது, வட்ட செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், பகுதி செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ்குமார், மாமன்ற உறுப்பினர் சந்திரபோஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


