கோவில்பட்டியில் நடைபெற்ற உலக தாய்ப்பால் வார நிறைவு விழாவில் பாலூட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது..
நாடு முழுவதும் தாய்ப்பாலின் அவசியம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 7ம் தேதி வரை உலகத் தாய்ப்பால் வார விழா கொண்டாடப்படுகிறது. கோவில்பட்டியில் குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம், ஜேசிஐ சார்பில் உலக தாய்ப்பால் வார நிறைவு விழா ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் நடந்தது. நிகழ்ச்சியில் தாய்ப் பாலின் அவசியம் குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த தாய்மார்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பானம், மற்றும் பேரிச்சம்பழம், கடலை மிட்டாய் உள்ளிட்ட ஊட்டச்சத்து பெட்டகம். வழங்கப்பட்டது. விழாவிற்கு ஜேசிஐ தலைவர் வெங்கடேஷ் தலைமை வகித்தார். பாரதியார் நினைவு அறக்கட்டளை தலைவர் முத்துமுருகன், குழந்தைகள் வளர்ச்சித் திட்ட மேற்பார்வையாளர் பாலம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார ஒருங்கிணைப்பாளர் நிவேதா வரவேற்றார்.
வட்டார குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்ட அலுவலர் திலகா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பாலூட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம், விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கி தாய்ப்பாலின் அவசியம் குறித்து பேசினார்.
இதில் ஜேசிஐ நிர்வாகிகள் தீபன்ராஜ், சூர்யா, வர்ஷன், தினகரன், குழந்தைகள் வளர்ச்சித் திட்ட மேற்பார்வையாளர் பேச்சியம்மாள், உள்பட மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள், பாலூட்டும் தாய்மார்கள், அங்கன்வாடி பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் குழந்தை வளர்ச்சித் திட்ட மேற்பார்வையாளர் முத்துமாரி நன்றி கூறினார்.


