
ரேவதி பிறப்பு: சூலை 8, 1966) தமிழ்த் திரைப்படங்கள், தென்னிந்தியத் தொலைக்காட்சித் தொடர்களில் நடிகையாக அறியப்படுகிறார். மலையாளம், தெலுங்கு மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இந்தி, ஆங்கிலத்தில் திரைப்படங்களை இயக்கியும் உள்ளார். இவர் ஐந்து முறை சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதினை வென்றுள்ளார்.
ரேவதி, 1966 ஜூலை 8-ல் கேரளத்தின் கொச்சியில் பிறந்தார். இவர் தந்தை கேளுண்ணி. ரேவதி, 1988 ல் சுரேஷ் மேனனைத் திருமணம் செய்தார். பின்னர், 2002 ல் இருவரும் மணமுறிவு பெற்று பிரிந்தனர்.